இலங்கை

இலங்கையில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை – ஒஸ்டின் பெர்னாண்டோ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் முழு அளவில் நல்லிணக்கம் எற்படுத்தப்படவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் முழு அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒஸ்டின் பெர்னாண்டோ நாளைய தினம் ஜனாதிபதியின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ள நிலையில் புதிய பதவி வழங்கப்பட்டது முதல் சமூக ஊடக வலையமைப்புக்களில் தம்மை விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய பதவியைத் தொடர்ந்து தமக்கு இவ்வாறு விமர்சனங்கள் வெளியிடப்படும் எனவும் அதனை தாங்கிக் கொள்ளுமாறு தமது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply