239
நேபாளத்தில் சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரைக் காணவில்லை எனவும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Spread the love