குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தோனேசியாவில் மிதவாத இஸ்லாமிய கொள்கைகள் பின்பற்றப்படுவதாக ஜனாதிபதி ஜோகோ விடடோ (Joko Widodo ) தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் கடும்போக்குடைய இஸ்லாமிய கொள்கைகள் பின்பற்றப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும் மிதவாத இஸ்லாமிய கொள்கைகளையே இந்தோனேசியா பின்பற்றி வருகின்றது என ஜனாதிபதி ஜோகோ விடடோ தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியம், சமூக நீதி மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை பின்பற்றி ஆட்சி நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.