இலங்கை

நாட்டில் தலைவர்கள் கூடி விட்டார்கள் – மஹிந்த ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்பொழுது நாட்டில் தலைவர்கள் கூடி விட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் வெளிநாட்டவருக்கு தேவையான வகையில் வழக்கு விசாரணை செய்து பயங்கரவாதத்தை இல்லதொழித்த அரசியல் மற்றும் படைத் தரப்பினரை தண்டிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அரசாங்கத்தில் அதிகளவான தலைவர்கள் இருக்கின்றார்கள எனவும்  இதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்மானத்தை எடுக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒரு கொள்கையையும், ஜனாதிபதி மற்றுமொரு கொள்கையையும் பின்பற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply