குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தொலைக்காட்சியை பார்க்கும் எவரும் நாட்டில் அரசாங்கமே இல்லை என்றே கருதுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலை வேளைகளில் தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு இந்த சந்தேகம் எழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதற்கு முழு தலைகீழான விடயங்களே ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி முனைப்புகள், நாட்டின் அமைதியான சூழ்நிலை, மக்களின் நலன்புரி போன்ற விடயங்கள் தலைகீழாகவே ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளும் நோக்கில் பதற்றங்கள் பிரச்சினைகள் மட்டுமே தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.