Home இலங்கைஅமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு

அமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்;டுள்ளதாக வெளியான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றில் இது குறித்து தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த விபரங்கள் காணப்படுவதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் எனினும் அமெரிக்கத் தூதரகத்திடம் அவ்வாறான எவ்வித தகவல்களும் கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More