Home இலங்கைஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது

ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

செய்தி மூலங்களை அறிவிக்க வேண்டும் என்ற வகையில் சட்டமொன்று அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தகவல்களை மூடி மறைத்து அரசாங்கத்தின் நன்மதிப்பினை தக்க வைத்துக் கொள்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டமை ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More