Home இலங்கைபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது – எல்லே குணவன்ச தேரர்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது – எல்லே குணவன்ச தேரர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடு செய்யக் கூடாது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்றை கொண்டு வருவதனால் நாட்டுக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘மாற்றம் சுகமா’ என்ற தொனிப் பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்தில் வெறுக்கப்பட்ட அரசாங்கம் இதுவேயாகும் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டில் நலிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியல் சாசனம் வழியமைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More