தேர்தல் ஆணையாளர்;கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டுமென இந்திய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இல்லாவிடில் நீதிமன்றம் தலையிடவேண்டியது வரும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் மிக உயர்ந்த தலைமைத் தேர்தல் ஆணையாளர் பொறுப்புக்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்யும் நபரே நியமிக்கப்படுகின்றனர். இதுதொடர்பான கோப்பு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் கையொப்பமிட்ட பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதி நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, அவரது பதவிக்கு தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டு அவர் இன்று பதவியேற்கிறார்.
இந்தநிலையில் தேர்தல் ஆணையாளர்கள் நியமனத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை யைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கோரி அனூப் பரன்வால் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டள்ளது.
00