Home இந்தியா​கதிராமங்கலத்தில் விடுதலை செய்யாவிட்டால், 8ம் திகதி அடையாள அட்டைகள் திரும்ப ஒப்படைக்கப்படும்:-

​கதிராமங்கலத்தில் விடுதலை செய்யாவிட்டால், 8ம் திகதி அடையாள அட்டைகள் திரும்ப ஒப்படைக்கப்படும்:-

by admin

​கதிராமங்கலத்தில் நேற்று 5-வது நாளாக கடையடைப்பு நடை பெற்ற நிலையில், கைது செய்யப் பட்டவர்களை நாளை 7ம் திகதிக்குள் விடுதலை செய்யாவிட்டால், நாளை மறுநாள் 8ம் திகதி அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பது என கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் , பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகினறமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More