Home இலங்கைகிழக்கில் பாடசாலைகளுக்கு கழிப்பறைகள் அமைக்க 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கீடு

கிழக்கில் பாடசாலைகளுக்கு கழிப்பறைகள் அமைக்க 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கீடு

by admin


கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு கழிப்பறைகளை நிர்மாணிக்க  தேசிய கல்வியமைச்சினால்  23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் கழிப்பறை குறைபாடுள்ள பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் குறைபாடுகளை தீர்க்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

தமது பாடசாலைகளில் கழிப்பறைகள் இன்மையால் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதையே நிறுத்தி இடை விலகுகின்ற நிலைமையும் தமக்கு அறியக் கிடைத்ததுடன் இவ்வாறான நிதியொதுக்கீடுகள் மூலம்   அந்தக் குறைபாடுகள் தீர்க்கக் கிடைத்தமை தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டிற்கான  நிதி ஒதுக்கீட்டின் போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளின் பற்றுச் சீட்டுக்களுக்கான நிதி  வழங்கப்பட்ட போதிலும் இந்த வருட அபிவிருத்திகளுக்கான நிதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More