குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்கா சர்வதேச குற்றவியல் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தென் சூடான் ஜனாதிபதி ஹசன் அல் பசீர் கடந்த 2015ம் ஆண்டு தென் ஆபிரிக்காவிற்கு பயணம் செய்திருந்தார்.
இவ்வாறு பயணம்; செய்திருந்த போது சர்வதேச குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ஹசன் அல் பசீரை கைது செய்திருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்படாது என நீதவான்கள் தெரிவித்துள்ளனர்.
தென் சூடான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உறுப்பு நாடு என்ற வகையில் தென் சூடான் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பசீரை கைது செய்ய வேண்டிய கடப்பாடு தென் ஆபிரிக்காவிற்கும் தென் சூடானுக்கும் உண்டு என நீதவான்கள் தெரிவித்துள்ளனர்.