Home இலங்கைஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலானோ நகரில் விமானச் சீட்டு மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கும் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு மோசடி செய்துள்ளார்.

இரண்டு லட்சம் யூரோ இத்தாலி வாழ் இலங்கையர்களின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விடுமுறைக்காக திரும்பவிருந்த 200 இலங்கையர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

விமான டிக்கட் வழங்குவதாக கூறி பணம் பெற்றுக் கொண்ட நபர் போலியான டிக்கட்டுகளை வழங்கியுள்ளார். இவ்வாறு போலி டிக்கட்டுகளை வழங்கியமை குறித்து மிலான் நகர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More