குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சில அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிநாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளது.
அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் எதேச்சாதிகார செயற்பாடுகள் தொடர்பில் அனைத்து தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் மகஜர் ஒன்றை ஒப்படைக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சில பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நாட்களில் தேசிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் முக்கிய உறுப்பினர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை தமது சங்கம் முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.