169
சீன வங்கி இலங்கையில் கிளையொன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பிரமாண்டமான நிதி நிறுவனமாக சீன வங்கி கருதப்படுகின்றது. தென் ஆசியாவில் சீன வங்கியின் கிளையொன்று நிறுவப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் சீன வங்கி இலங்கையில் கிளையை நிறுவ உள்ளது. கொழும்பில் இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் இந்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது.
Spread the love