ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காஷ்மீரின் 3 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் பிரிவினைவாதிகளின் பேரணியை தடுக்க எல்லா இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தநிலையில் தெற்கு காஷ்மீரில் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதன்போது போது புர்ஹான் வானி மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அத்துடன் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் ராணுவத்தினர் மீது மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் எனவும் நிலைமையை கட்டுப்படுத்த துணை ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின், காஷ்மீர் பிரிவு தலைவராக இருந்தவர் புர்ஹான் வானி. பாதுகாப்புப் படையினரின் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8ம் திகதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0000