159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டார் பிரதமர் Sheikh Abdullah bin Nasser bin Khalifa al-Thani க்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்போது கட்டாருக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இரு தரப்பு உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் சில பிரதிநிதிகளும் கட்டாருக்கான பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்
Spread the love