இலங்கை

அரிசி விலை மேலும் உயர்வடைந்தாலும் சலுகை விலையிலேயே மக்களுக்கு வழங்கப்படும் :

கடந்த கால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை மேலும் அதிகரிப்பதால்  அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி   தெரிவித்துள்ளார்.

இன்று   பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரிசி விலை எவ்வளவுதான் அதிகரித்தாலும், அரசாங்கத்திலுள்ள பெரியவர்களுக்கு அது தெரிவதில்லை என தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி  ;, சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மக்களின் கவலை, வேதனைகளை புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் என்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த அனுபவத்துடனே மேற்கொள்வதாகவும், நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட தான் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply