குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றில் ஆதரவு திரட்டப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட உள்ளதாக சிலர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கினை இணைக்கவோ நாட்டை பிளவுபடுத்தவோ கோரப் போவதில்லை என தமிழ் அரசியல் கட்சிகளே கூறி வரும் நிலையில் சிலர் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் தடவையாக பாராளுமன்றில் அனைத்து கட்சிகளும் கூட்டாக இணைந்து புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்க முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.