Home இலங்கைபலவந்த காணாமல் போதல் குறித்த பிரகடனம் மூலம் படையினரையும் அரசியல் தலைமைகளையும் தண்டிக்க முடியும் – ஜீ.எல்.பீரிஸ்

பலவந்த காணாமல் போதல் குறித்த பிரகடனம் மூலம் படையினரையும் அரசியல் தலைமைகளையும் தண்டிக்க முடியும் – ஜீ.எல்.பீரிஸ்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பலவந்த காணாமல் போதல் குறித்த பிரகடனம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு பொய்யானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பலவந்த காணாமல் போதல்கள் குறித்த பிரகடனத்தின் ஊடாக எதிர்கால குற்றச் செயல்களுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படாது எனவும் கடந்த கால பிரச்சினைகளுக்கும் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தைக் கொண்டு படையினரையும் அரசியல் தலைமைகளையும் தண்டிக்க முடியும் என அவர் மீளவும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் போது இலங்கையர்களை கைது செய்து தண்டிக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இந்த சட்டத்தில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட முடியும் எனவும், பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இந்த பிரகடனத்தில் கையொப்பமிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More