149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத கால அடிப்படையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அமுலில் இருக்கும் எனவும் குறித்த காலத்திற்குள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரம் இலங்கையர்கள் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love