இலங்கை

டெங்குவை இல்லாதொழிக்க வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி அவசியமில்லை – மஹிந்த ராஜபக்ச


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

டெங்குவை இல்லாதொழிப்பதற்கு வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவன்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பார்வையிடுவதற்காக சென்று திரும்பிய போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டெங்கு நோயினால் லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானில் டெங்கு நோய் பரவிய போது அதனை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையிலிருந்து மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தாம் பாகிஸ்தான் சென்றிருந்த போது அதற்காக நன்றி பாராட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இன்று நாட்டில் நிலைமை மாற்றமடைந்துள்ளதகாவும் வெளிநாட்டு மருத்துவர்களின் ஒத்துழைப்புடனும் டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply