குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பு தடைகளை விதித்தால் அதனை எதிர்நோக்கத் தயார் என வடகொரியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை வடகொரியாவிற்கு எதிராக மேலும் தடைகளை விதித்து தீர்மானம் நிறைவேற்றினால், அதனை எதிர்நோக்கத் தயார் என வடகொரியா தெரிவித்துள்ளது.
ஏவுகணை பரிசோதனைத் திட்டத்திற்கு எதிராக இவ்வாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தடைகள் விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் வடகொரியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
அணுவாயுத திட்டங்கள் பரிசோதனை நடவடிக்கைகள் அமெரிக்காவிடமிருந்து பிரயோகிக்கப்படும் அணுவாயுத அழுத்தங்களை எதிர்நோக்கவே அன்றி வேறும் தேவைக்காக அல்ல என வடகொரியா தெரிவித்துள்ளது.
மேலும் வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க சர்வதேச சமூகம் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.