குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் மற்றும் ஆபத்தான வலயங்களில் வசிப்போருக்கு இவ்வாறு வீடுகள் வழங்கப்பட உள்ளன.
பரீட்சார்த்த முயற்சியாக உயரத்தில் குறைந்த அடுக்குமாடி வீடுகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாதைகள், கட்டடங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட காவல் நிலையங்களை புனரமைக்கும் போதும் இரண்டு மாடிக் கட்டடங்களாக அவை நிர்மானி;க்கப்பட வேண்டுமென பிரதமர் கூறியுள்ளார்.