206
ரஸ்யாவை அண்மித்துள்ள வடக்கு பசுபிக் பெருங்கடலில் 7.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. ரஸ்யாவுக்கும் அலஷ்காவுக்கும் இடையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலநடுக்கத்தினையடுத்து சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவிற்குள் இந்த சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அலஷ்கா மாநிலத்தின் பல்மர் நகரில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது
Spread the love