குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரட்டைக் குடியுரிமை கொண்ட அவுஸ்திரேலிய செனட்டர் லறிஸா வோற்றேர்ஸ் ( Larissa Waters) பதவி விலகியுள்ளார். இடதுசாரி கிறீன் கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற லறிஸா வோற்றேர்ஸ் கனடாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குடியுரிமை கொண்ட எவரும் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கக் கூடாது என்பது அந்நாட்டு அரசியல் சாசனத்தில் சட்டமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த ஒரு வார காலத்திற்குள் இரண்டு செனட்டர்கள் தங்களது பதவி விலகியுள்ளனர். கடந்த மே மாதம் பாராளுமன்றில் அமர்வுகள் நடைபெறும் போது தனது பிள்ளைக்கு தாய்பால் ஊட்டி லறிஸா வோற்றேர்ஸ் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.