குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு நாட்டுக்கும் வீசா வழங்குவது தடை செய்யப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் வழமை போன்று வீசா வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சிரியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு வீசா வழங்கும் போது விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட எந்தவொரு தேவைக்காகவும் இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீசா வழங்குவதில் காலம் தாழ்த்தப்படாது என தெரிவித்துள்ளார்.