194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இலங்கை தொடர்பில் இரண்டாம் கட்ட மீளாய்வு நடத்தி இவ்வாறு கடன் தொகை வழங்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 167.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் செயற்பாடுகள் குறித்து திருப்தி கொள்வதாகவும் இதன் அடிப்படையில் கடன் வழங்கப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
Spread the love