முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் அவரது தாயார் அற்புதம்மாள் இன்றைய தினம் சட்டசபைக்கு இசென்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளார். இதன்போது சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் மனுகையளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் பரோல் விவகாரம் தொடர்பாக தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத் தொடரில் ஏற்கனவே ஒருமுறை அமைச்சர் சிவி.சண்முகத்தை நேரில் சந்தித்து அற்புதாம்மாள் மனு அளித்து இருந்தார்.
பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.