விளையாட்டு

மொனாகோ மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 100 மீற்றர் போட்டியில் போல்ட் வெற்றி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மொனாகோ டயமன்ட் லீக் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 100 மீற்றர் போட்டியில் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் வெற்றியீட்டியுள்ளார்.

இந்த ஆண்டில் முதல் தடவையாக போல்ட் 100 மீற்றர் தூரத்தை 10 செக்கன்களுக்குள் ஓடி முடித்து வெற்றியீட்டியுள்ளார். 9.95 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து போல்ட் வெற்றியீட்டியுள்ளார்.

விரைவில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள போல்ட்டுக்கு இன்றைய போட்டியில் கடுமையான சவால் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போல்;ட் ஒலிம்பிக் போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply