160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இன்றைய விசாரணையின் போது குறித்த வழக்கினை நீதிவான் நீதிமன்றில் பல மாதங்களாக விசாரணை செய்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் காலை சாட்சியம் அளிக்க உள்ளார்.
அதேவேளை இன்றைய தினம் குறித்த வழக்கின் விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவும் சாட்சியம் அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love