Home இலங்கைவடக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்:-

வடக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்:-

by admin

நல்லூர் தாக்குதலை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனா். கிளிநொச்சி டிப்போச் சந்தி பசுமைபூங்காவில் இவ்வார்ப்பாட்டம் இன்று காலை பத்து மணிக்கு நடத்தப்பட்டது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகளை உடனே தண்டிக்கவும்,நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? இலங்கையில் நீதி மறுக்கப்படுகின்றதா? சுட்டதால் சட்டம் சாகாது நீதிக்கு விடுக்கப்படும் சவால் நல்லாட்சிக்கு சவால் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.

ஆர்ப்பாட்த்தில் கலந்துகொண்டவா்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டச் செலயகம் சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜரையும் கையளித்தனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More