Home இந்தியாமனித சங்கிலி போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி:-

மனித சங்கிலி போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி:-

by admin

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்டு திமுக சார்பில் இன்று நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திமுக இன்று தமிழக தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இந்த போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று சட்டத்தரணி சத்தியமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் லழக்கு தாக்கல் செய்திருந்தார்

அதில், கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தான் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது, இது மற்ற மாநிலங்களுக்கு தூண்டுதலாக அமையும். எனவே இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்றையதினம் மாலை விசாரணைக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் முன்னலையான வழக்கறிஞர், திமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி தரவில்லை எனத் தெரிவித்தார்;.
இதையடுத்து அரசு அனுமதி மறுத்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More