தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கடற்படை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரவிராஜின் கொலை வழக்கை மீள விசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரசாத் ஹெட்டியாராச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாவில்லை என்பதனால் அவரைக் கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் கோரினார்.
குறித்த விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது
Spread the love
Add Comment