இலங்கை

இணைப்பு 2 -துறைமுகப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு ஒத்தி வைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

துறைமுகப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது.
சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்குவது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமைக்கு எதிராக  ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துறைமுகப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்

Jul 27, 2017 @ 03:02
இலங்கை துறைமுகப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை துறைமுக  பொதுப் பணியாளர்கள் ஒன்றியம் இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீதமான பகுதியை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தி சனிக்கிழமை இந்தப் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது பொருத்தமானதல்ல எனவும்  இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க தொடர்ந்தும் போராட்டங்கள் நடத்தப்படும் என துறைமுகப் பணியாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply