Home உலகம்அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு ஒருவர் தீக்குளித்துள்ளார்

அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு ஒருவர் தீக்குளித்துள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நபர் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டுள்ளார்

சிட்னியில் குடிவரவு திணைக்களத்திற்கு அருகில்  குறிப்பிட்ட நபர் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திணைக்களத்திற்கு அருகில் உள்ள லீ வீதியில் 30 வயது மதிக்கத்தக்க  நபர் தன்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் மருத்துவமனையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் சுமார் பத்து நிமிடங்களிற்கு மேல் அந்த நபருடன் பேச்சுவார்த்தைகைள மேற்கொண்டதாகவும் எனினும் பின்னர் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துiயினர் அங்கு வந்தவேளை பெட்ரோலை உடல் முழுக்க ஊற்றிக்கொண்ட நபர் ஓருவரை அவர்கள் பார்த்ததாகவும் அந்த நபருடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் அந்த நபர் பின்னர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அதிகாரியொருவர் அந்த நபர் குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளியிட்டார் என தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More