Home உலகம்அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதனை அவுஸ்திரேலிய  பிரதமர் மெல்கம் டர்ன்புல் உறுதி செய்துள்ளார்.

மேலும் சிட்னியில் மேற்;கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படவிருந்த வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய நான்கு பேரே கைது இவ்வாறு செய்பய்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையாளர் அன்ட்ரூ கொல்வின் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More