Home இந்தியாஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்:-

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்:-

by admin

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தாஹப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலினையடுத்து நேற்றிரவில் இருந்து அங்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்த போது இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் மேலும் தப்பியோடிய மற்ற தீவிரவாதிகளை கைது செய்வதற்காக தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More