Home இலங்கைஜனாதிபதிக்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது – ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதிக்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது – ஜீ.எல்.பீரிஸ்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தமது ஆசீவாதம் இன்றி ஆட்சி அமைக்க முடியாது என ஜனாதிபதி கூறியிருப்பது, அரசியல் சாசனம் பற்றிய அவரது அறியாமையை வெளிப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பிதா ஜே.ஆர்.ஜயவர்தன முதலான முன்னைய ஜனாதிபதிகள் ஐவரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், மாதுலுவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளின் போதும் அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மீறியே இவ்வாறு கருத்து வெளியிட்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More