இலங்கை

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பேச்சுவார்த்தை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் ராஜாங்க வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனாநாயக்க, வியட்நாமுக்கு  பயணம்; ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் வியட்நாம் பிரதி வெளிவிவகார அமைச்சர் Dang Dinh Quy ஐ   சந்தித்துள்ளார்.

இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகளை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உயர்த்துவதற்கு இந்த சந்திப்பின்போது இணங்கப்பட்டுள்ளதுடன் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply