உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 – டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும் ரோர்ச் ரவரில் தீவிபத்து


டுபாயின் மெரினா பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும்  79 மாடிகளை கொண்ட  ரோர்ச் ரவர் ( torch tower ) இல் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் 9-ஆவது மாடியில் பற்றிய தீ, தொடர்ந்து எரிந்து அடுத்தடுத்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு  சென்று  அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தினால ; ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1105 அடி உயரம் கொண் இஅந்த  ரோர்ச் ரவர் கடந்த 2011-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.  ஏற்கனவே, 2015-ஆம் ஆண்டிவும் இங்கு  தீ விபத்து ஏற்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link