Home இலங்கைகிழக்கு மாகாண ஆளுநர் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விவரங்களை கோரியுள்ளார்

கிழக்கு மாகாண ஆளுநர் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விவரங்களை கோரியுள்ளார்

by admin

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விவரங்களை சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள   கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அது தொடர்பில்  உரிய அதிகாரிகளுடன்  கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், கிழக்கு ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், 156 நாட்களைக் கடந்துள்ள நிலையில்   கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்  கிழக்கு ஆளுநரிடம் நேற்றையதினம்  மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

மகஜரைப் பெற்றுக்கொண்ட   ஆளுநர்  மேற்படி உறுதியளித்ததாக  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More