232
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. வற்றாப்பளையிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில் மாத்திரம் 11 இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கேப்பாபுலவுப் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பகுதியை விடுவிக்குமாறு கோரி 156 நாட்கள் கடந்த நிலையில் மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். தமது நிலப் பகுதியை விடுவிக்கும்வரையில் போராட்டம் தொடரும் என்றும் கேப்பாபுலவு மக்கள் கூறுகின்றனர். இதனால் 138 குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளனர்.
கேப்பாபுலவு பகுதியில் உள்ள முல்லைத்தீவு பிரதான படைத்தலைமையகம் தவிர நந்திக்கடலின் வலதுகரை பகுதியில் 10 பாரிய இராணுவமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப் பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடலின் வலதுகரைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவமுகாங்கள் தொடர்பான இராணுவ அறிவிப்புப் பலகை அப் பகுதியின் இராணுவ நில ஆக்கிரமிப்பினை வெளிப்படுத்துவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
Spread the love