குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக குறுந்தூர ஜாம்பவான் என போற்றப்படும் ஜமெய்க்காவின் ஹூசெய்ன் போல்ட் தான் பங்கேற்ற இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
2017 உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 100 மீற்றர் போட்டியில், போல்ட் வெண்கலப் பதக்கத்தையே வென்றார்.
ஹூசெய்ன் போல்ட் உலக அளவில் பங்கேற்ற எந்தவொரு தனிப் போட்டியிலும் தோல்வியைத் தழுவியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 19 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள போல்ட், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளும் இறுதி உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வெல்லும் நோக்கில் லண்டனில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றிருந்தார். எனினும், போட்டியில் போல்ட் வெண்கலப் பதக்கத்தையே வென்றிருந்தார்.
இந்தப் போட்டியில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்நோக்கி வந்த அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் 9.92 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அமெரிக்காவின் மற்றுமொரு வீரரான கிறிஸ்டியன் கொலிமான் 9.94 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இறுதியாக பங்கேற்ற போட்டியில் வெற்றியீட்டிய முடியாமை வருத்தமளிப்பதாக போல்ட் தெரிவித்துள்ளார்.