Home இலங்கைரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் முயற்சியில் மாநாயக்க தேரர்கள்

ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் முயற்சியில் மாநாயக்க தேரர்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் முயற்சியில் சில மாநாயக்க தேரர்கள் ஈடுபட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள், தேர்தல் நடத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கவனத்திற் எடுக்காது ரவி கருணாநாயக்கவை மட்டும் இலக்கு வைத்து அழுத்தங்களை பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மாநாயக்க தேரர்கள் கருத்து வெளியிட உள்ளனர்.

ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்துவதன் ஊடாக அரசாங்கத்தின் மீதான ஒட்டு மொத்த குற்றச்சாட்டுக்களும் புறந்தள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More