குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தில் நவீன அடிமைமுறையும் ஆள்கடத்தல்களும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக காணப்படுவதாக தேசிய குற்ற முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் ஓவ்வொரு நகரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்ற முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நவீனஅடிமைமுறை மற்றும் ஆள்கடத்தலிறகு பாதிக்கப்பட்டவர்கள் 10,000 முதல் 13.000 வரையிருக்கலாம் என நாங்கள் முதலில் மதிப்பிட்டோம் எனவும் எனினும் எங்கள் கணிப்பு மிகவும் பிழையானது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் தேடுதல் நடத்தும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது தெரியவருகின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் இதற்கு எதிரான 300 நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆள்கடத்தல்காரர்களிடம் சிக்கியவர்கள் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் பலர் தாங்கள் அறியாமலே இவ்வாறு சிக்கிக்கொள்கின்றனர் எனவும் தேசிய குற்ற முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவாளிக்கும்பல்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன எனவும் பெருமளவு பணத்திற்காக அவர்கள் இதனை செய்கின்றனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.