Home இந்தியாகதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் சிறையிலிருந்து விடுதலை:-

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் சிறையிலிருந்து விடுதலை:-

by admin

தஞ்சை மாவட்டம் கதிராமங்கல  மக்கள் நடத்திய போராட்டத்தில்   கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட  பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜன், ரமேஷ் உள்பட 10 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க குழாய்கள் பதிப்பதினால் விவசாய நிலங்கள் பாதித்து, குடிநீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் போது   போராட்டக்காரர்கள் – பொலீசார் இடையே ஏற்பட்ட மோதல் தடியடியில் முடிந்தது. இதில் 3 போலீசார் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தஞ்சை பொலீசார் கிராமமக்கள் போராட்டத்தை தூண்டி விட்டதாக அப்பகுதி பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜன், ரமேஷ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இவர்கள் 10 பேரும் கடந்த 1.7.2017 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி சிறையில் இருந்து தங்களை பிணையில் விடுவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேரை பிணையில் விடுவிக்க மதுரைஉயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

அதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டு பேராசிரியர் ஜெயராமனோடு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட தர்மராஜன், ரமேஷ் ஆகியோர் பிணையில் விடுவிக்க கோரி   தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களுக்கும் நிபந்தனை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் கடந்த மாதம் 1-ந்திகதி முதல் 43 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும் இன்று காலை 8 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான 10 பேரையும் அப்பகுதி பிரமுகர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். இது தொடர்பாக பேராசிரியர் ஜெயராமன் கூறும்போது :-

“கதிராமங்கலத்தில் அமைதியான முறையில் நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலவரமாக்கினர். இந்த சம்பவத்தில் கதிராமங்கலம் கிராம குடிநீரை நஞ்சாக மாற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், இதை தடுக்க தவறிய அதிகாரிகளும், தடியடி நடத்திய பொசிசாருமே குற்றவாளிகள்.

எங்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More