குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் உத்தேசம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடையாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 17ம் திகதி கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நீதிமன்ற நிர்வாகம் தொடர்பில் கருத்து வெளியிடும் உரிமை அனைவருக்கும் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை நடத்தி விசாரணைகளை பூர்த்தி செய்து அது தொடர்பான 80 ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.