குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த 38 ஏக்கர் தனியார் காணிகள் இன்று செவ்வாய் கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இன்று செவ்வாய் கிழமை இராணுவத்தினரால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனா்
கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனம் காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கரைச்சி, பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன், உதவி மாவட்டச் செயலாளா் பிருந்தாகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.