குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 27 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவில் மூன்று பெண் தற்கொலைதாரிகள் நடத்திய தாக்குதல்களிலேயே இவ்வாறு 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போர்னோ மாநிலத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றிற்கு அருகாமையில் மேற்படி குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் கடுமையான வன்முறைச் சம்பவங்கள் நைஜீரியாவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் போர்கோ ஹாராம் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசமொன்றை உருவாக்கும் நோக்கில் நைஜீரியாவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் .
ஆண்களை விட அதிக பெண்களை பயன்படுத்தும் முதல் கிளர்ச்சிக் குழுவாக போக்கோ ஹராம் இருக்கிறது என்று அமெரிக்காவின் தீவிரவாதிகள் எதிர்ப்பு ஆய்வாளர்களால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது